Advertisment

''இதுதான் நடந்தது...''- ரயில் விபத்தில் சிக்கிப் பிழைத்த மாணவன் பரபரப்பு வாக்குமூலம்

a4339

''This is what happened...''- Shocking confession of student who survived accident Photograph: (cuddalore)

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் தனியார் பள்ளி வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில்  மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

விபத்து நடந்த பகுதியில் கேட் கீப்பர் அலட்சியமாக இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டானது 'Non inderlocking' கேட் என்பதால் அதை மூடுவதற்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்படும் என்ற நிலையில் இன்று காலை ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடுவதற்கான தகவல் முறையாக அளிக்கப்பட்டதா அல்லது இல்லையா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது. இருப்பினும் இந்த விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்தோடு கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

மொத்தம் ஐந்து பேர் அந்த பள்ளி வேனில் பயணித்துள்ளனர். ஆறாம் வகுப்பு மாணவன் நிமலேஷ், பதினொன்றாம் வகுப்பு மாணவி சாருமதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், செழியன் என்ற சிறுவன் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  போகும் வழியிலேயே செழியன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் பகுதியில் பணியிலிருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா அலட்சியமாக இருந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் தாக்கியதால் போலீசார் பாதுகாப்புடன் பங்கஜ் சர்மாவை பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தனர். அவரிடம் தொடர்ச்சியாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பள்ளி வேனை ஓட்டி வந்த சங்கர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கேட்டை திறந்ததாக பஞ்சஜ் சர்மா வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். 

a4338
''This is what happened...''- Shocking confession of student who survived accident Photograph: (cuddalore)

இந்நிலையில் தீவிர சிகிச்சையில் உள்ள வேன் ஓட்டுநர் சங்கர் இதனை மறுத்துள்ளார். கேட் திறந்து இருந்ததால் ரயில் சென்றிருக்கும் என வேனை முன்னோக்கி இயக்கியதாகவும், ரயில் வருவதற்கான சத்தம் வராததால் வேனை இயக்கியதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த விபத்தில் சிக்கி சிகிச்சையில் உள்ள மாணவன் விஸ்வேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், ''கேட் எப்போதும் போல திறந்துதான் இருந்தது. ரயில் சென்றுவிட்டது என்றுதான் ஓட்டுநர் வேனை இயக்கினார். அப்போது கேட் கீப்பர் அங்கே இல்லை. அவர் உள்ளே இருந்தாரா அல்லது தூங்கிவிட்டாரா தெரியவில்லை. ஓட்டுநர் சொன்னதால்தான் கேட் திறக்கப்பட்டது என்பது தவறான தகவல். விபத்து நடந்த பிறகும் கூட கேட் கீப்பர் அங்கு வெளியே வரவில்லை'' என வாக்குமூலம் அளித்துள்ளார். 

school van train accident Cuddalore district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe