'This is an act of against us' - Revenue Employees' Federation decides to boycott SIR work Photograph: (SIR)
.
வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப் (SIR) பணிகள் தமிழக முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் எஸ்ஐஆர் பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பணிகளில் உள்ள ஊழியர்கள் பங்கேற்று வீடு வீடாகச் சென்று எஸ்.ஐஆர் விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணிகளில் நாளை முதல் ஈடுபடப் போவதில்லை என வருவாய்த்துறை சங்கங்களுடைய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதற்கான காரணங்களாக அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை முழுமையாக பிழைகள் இன்றி மேற்கொள்ளக் கூடுதல் பணியாளர்கள் நியமன வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் நள்ளிரவு வரை கூட்டங்கள் நடத்துகின்றனர். தினமும் காணொளி வாயிலாக மூன்று கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இவற்றால் எங்களுக்கு பணிச்சுமை அதிகம் ஏற்பட்டுள்ளது.
எங்களை துன்புறுத்துவதை போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாட்களிலும் கூட திருத்தப் பணிகளில் ஈடுபட வேண்டும் என அரசுப் பணியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. கடுமையான பணிச்சுமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அவர்களுக்கு மேலே உள்ள கண்காணிப்பாளர்கள் பணிபுரிகின்றனர். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் இருக்கும் கூடுதலான பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக கணக்கிட்டு வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் நாளை முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளில் நாங்கள் ஈடுபட மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
Follow Us