'This is a sudden decision taken by Ramadoss' - Kantimathi interview Photograph: (pmk)
பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. இந்நிலையில் அண்மையில் அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதே நேரம் தங்கள் தரப்பு தான் உண்மையான பாமக என அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டு அன்புமணி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தர்மபுரியில் நடைபெற்று வரும் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், பாமக செயல் தலைவராகத் தனது மகள் ஸ்ரீ காந்தி என்கிற காந்திமதியை நியமிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “என்னுடைய பெரிய மகள் ஸ்ரீகாந்தியை அழைத்துக் கொள்கிறேன். அவர் கட்சியையும் வளர்ப்பார், எனக்கும் பாதுகாப்பாக இருப்பார். எனவே அவருக்கு நாம் அனைவரும் வாழ்த்து சொல்லுவோம்” எனப் பேசினார்.
இந்நிலையில் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காந்திமதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,''ராமதாஸ் சொல்வதை போல் செயல்படுவேன். அவர் சொல்லும் கட்டளைகளை ஏற்று அதன்படி நடப்பேன். இந்த தர்மபுரி மண்ணில் எனக்கு இந்த பதவி கொடுத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த பதவி எனக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. திடீரென ராமதாஸ் முடிவு எடுத்து அறிவித்துள்ளார். மக்கள் கட்சி வளர்ச்சிக்கு எது தேவையோ அதைச் சிறப்பாக செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்'' என்றார். தொடர்ந்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் குறித்த செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து நகர்ந்தார்.
Follow Us