கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக சார்பில் கோவையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisment

கோவை விமான நிலையத்தின் பின்புறம் கடந்த 2-ம் தேதி இரவு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய  இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

Advertisment

இச்சம்பவத்தை கண்டித்து  அதிமுக சார்பில் இன்று  (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோவை மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் இன்று காலை 11 மணியளவில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணி மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி பேசுகையில் ‘’2 பேர் காரில் வந்தார்கள் அவர்கள் மைதானத்திலே பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது 3 பேர் வந்து அந்த பெண்ணை ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துப் போய், அந்த பெண்ணை துன்புறுத்தி முள்செடியில் தூக்கி வீசியிருக்கிறார்கள். ஒரு மணி நேரம் கழித்து காயம்பட்ட இளைஞர் புகார் சொன்ன பிறகு பெண்ணை தேட ஆரம்பித்திருக்கிறார்கள் போலீஸார்.

நேற்று எஸ்.பி.வேலுமணி இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும், குற்றவாளியை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்த பிறகே, போலீஸ், குற்றவாளிகளை கண்டுபிடித்தார்கள். அதுவும் துடியலூருக்கு அருகில் 3 பேரை சுட்டுப் பிடித்தார்களாம். ஜெயலலிதா காலத்து போலீஸ் என்றால் உங்களுக்கு சல்யூட் அடித்திருப்போம். இப்போது ஸ்டாலின் காலத்து போலீஸாய் இருப்பதால் கேள்வி கேட்கிறோம். சுட்டுப் பிடித்தவர்கள் யார் யாரென்று முகத்தையாவது காட்டுங்கள்’’ என்று வளர்மதி ஆவேசமாக பேசினார். 

Advertisment