தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

ஓ.பன்னீர்செல்வமும் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. முன்னதாக நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ''கூட்டணி அறிவிப்பு வரும் பொழுது உண்மையிலேயே நீங்கள் எல்லாரும் மிகப்பெரிய சந்தோசத்தில் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் இருப்பீர்கள். சரியான முடிவை நான் எடுத்திருக்கிறேன், சரியான நேரத்தில் அறிவித்துள்ளார்கள் என்று நீங்கள் எல்லோரும் மிகவும் பெரிய சந்தோஷத்தில் இருப்பீர்கள். அப்படி அந்த அறிவிப்பு இருக்கும் என்பதை மட்டும் இப்பொழுது உங்கள் முன்னே தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பேசியிருந்தார்.

Advertisment

இதனால் விரைவில் தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதிமுக, திமுக உள்ளிட்ட இரண்டு கட்சிகளிடமும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இன்று கூட்டணி குறித்த நிலைப்பாட்டை தேமுதிக அறிவிக்கும் என்ற தகவலும் வெளியானது.

898
''This alliance will win 200 plus votes...''-Premalatha Vijayakanth interview Photograph: (dmdk)
Advertisment

இந்நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷை அமைச்சர் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டார். இந்த சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். கட்சி ஆரம்பித்ததில் இருந்து முதல் முறையாக தேமுதிக திமுவுடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''இன்று திமுகவுடன் கூட்டணியை தொடங்குகிறோம் என்ற செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை கொடுத்துவிட்டோம். கூட்டணிக்கான விடை இன்று அறிவித்தாகிவிட்டது. திமுகவுடன் தேமுதிக முதல் முறையாக கூட்டணி அமைத்திருக்கிறோம். இது ஒட்டுமொத்த தமிழக மக்களும் சரி, இரண்டு கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சரி, கூட்டணி கட்சியை சேர்ந்த அனைவரும் மிக சந்தோசத்தோடு இந்த கூட்டணியை வரவேற்று இருக்கிறார்கள். அதனால் இந்த கூட்டணி 200 பிளஸ் பெற்று அமோக வெற்றி பெறும் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக சொல்கிறேன். திமுகவின் தலைமையில் ஸ்டாலின் என்னென்ன தொகுதிகள் என்பதை அறிவிப்பார். விஜயகாந்த் இருந்தபோதே அமைந்திருக்க வேண்டிய கூட்டணி இது. தேமுதிக சார்பில் குழு அமைத்து குழுவின் மூலம் எத்தனை இடங்கள், எந்தெந்த தொகுதிகள் எல்லாம் தலைமையில் இருக்கும் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்'' என்றார்.