அண்மையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி வடமாநில இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த இளைஞன் 14 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டான். ராஜூ பிஸ்வ கர்மா என்ற வடமாநிலத்தை சேர்ந்த அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பாக அந்த வழியாக வந்த கர்ப்பிணி பெண்ணிடம் சீண்டலில் ஈடுபட்ட நிலையில் அந்த இளைஞரை அப்பெண் கண்டித்து விரட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை பிஸ்வ கர்மா பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
தான் தங்கியிருந்த தாபா ஹோட்டல் கடையில் இருந்து செல்போனை சரி செய்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் பிஸ்வ கர்மாவை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணையில் ராஜு பிஸ்வ கர்மா உள்ளான். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பெயரில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வ கர்மா மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.