சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இவர் மீது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி (28.06.2025) நகை திருடியதாக நிகிதா என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையின் போது போலீசார் அவரை கடுமையாக தாக்கியதில் ஜூன் 29ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து இந்த வழக்கைத் சி.பி.ஐ. விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியியுள்ளனர். அதன்படி எஸ்.பி. ராஜ்பீர் மற்றும் டி.எஸ்.பி. மோகித்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மடப்புரத்தில் நகை காணாமல் போனதாகக் கூறிய கல்லூரி பேராசிரியர் நிகிதாவின் காரை பார்க்கிங்கில் விட்ட பின்னர் வெளியே வேறு எங்கும் செல்லவில்லை என சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி காலை 9:30 மணியளவில் மடப்புரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிகிதா காரை பார்க் செய்து தருமாறு அஜித்குமாரிடம் கூறி சாவியை அவரிடம் கொடுத்துள்ளார்.
அச்சமயத்தில் அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் அருனிடம், அஜித்குமார் சாவியைக் கொடுத்து காரை கோவில் எதிரே உள்ள பார்க்கிங்கில் நிறுத்த சொல்லியுள்ளார். அதன்படி காரை நிறுத்திவிட்டு 5 நிமிடத்தில் சாவியை நிகிதாவிடம் அஜித்குமார் கொடுத்துள்ளார். ஆனால் நகை காணாமல் போனதாக நிகிதா கொடுத்த புகாரில் கார் சாவியை நீண்ட நேரம் கழித்துத் தந்ததாகக் கூறப்பட்டது. மேலும் காரைஅஜித்குமார், அவரது நண்பர் ஆட்டோ டிரைவரும் அருணும் சேர்ந்து வடகரை வரையை ஓட்டி சென்றதாகவும் கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தான் சிபிஐஅதிகாரிகளும் முதல் நாள் விசாரணையை வடகரையில் இருந்து தான் தொடங்கியிருந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கார் வந்து சென்றதாகத் தெரியவில்லை.
அதோடு காரை நிகிதாவே ஓட்டி சென்று மீண்டும் அவரே ஓட்டி வருவதாகவே பதிவாகியுள்ளது. மேலும் சி.சி.டி.வி. கேமார காட்சிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலத்திற்குப் பிறகு நிகிதாவின் காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு 2 நிமிடத்திற்குள், சாவியை அவரிடம் ஒப்படைத்துள்ளனர். என் எனத் தெரியவந்துள்ளது. மீண்டும் பார்க்கிங்கில் இருந்த காரை 10 நிமிடத்திற்குள் எடுத்து வந்து நிகிதாவிடம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கோவிலுக்கு நிகிதாவும் அவரது தாயாரும் காரில் வந்த பின்னர் கோவிலில் இருந்து கார் வெளியே யாரும் எடுத்துச் செல்லவில்லை என்பதும் சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.