trichy police incident temple Photograph: (police)
இன்று வைகுண்ட ஏகாதசி தினம் என்பதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் பெருமாள் கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாட்டு நிகழ்வில் நபர் ஒருவர் போலீசாரை கத்தியால் தாக்க முயன்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் அரிசிக்கடை வீதியில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாட்டிற்காக பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக திருப்பூர் தெற்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த நபர் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் திடீரென போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கையில் வைத்திருந்த கத்தியால் போலீசாரை தாக்க முயன்றதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் காட்சிகளும் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Follow Us