கார்த்திகை தீப நாள் அன்று கோயில் வழக்கப்படி உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதே சமயம் மற்ற நாட்களில் மலையில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என திருப்பரங்குன்றம் கோயில் அர்ச்சகர்கள், கோயில் செயல் அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “சிவாகமங்களில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவானது விஷேடமான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றது.
அத்தகைய திருக்கார்த்திகையன்று அதிவாசங்களுடன் கூடிய தீபத்தை திருக்கோவில் கோபுரங்கள், மண்டபங்கள், பிரகாரங்கள், திருக்கோவில் சமீபத்தில் உள்ள மலைகள், கிரிவலப் பாதைகள் ஆகிய இடங்களில் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களாக அமைகின்றது. மேலும் கார்த்திகை மாதம் வருகின்ற கார்த்திகை நட்சத்திரத்திலோ அல்லது பெளர்ணமியிலோ தீபம் ஏற்றுவது உத்தர காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ளது. இதர நாட்களில் செய்யப்படுவது விஷேடமாக சொல்லப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/thiruparankundram-issue-letter-2025-12-05-12-14-31.jpg)
மற்றொரு கடிதத்தில், “இந்த ஆண்டும் 03|12|2025 புதன்கிழமை அன்று மாலை 6மணியளவில் இத்திருக்கோவில் வழக்கப்படி திருக்கோவிலுக்குள் பால தீபம் ஏற்றிய உடன் அதே நேரத்தில் வழக்கமாக ஏற்றக்கூடிய உச்சிபிளளையார் கோவிலில், தீபமண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு பின்பு சுவாமி புறப்பாடாகி, பதினாறுகால் மண்டபம் எதிரே உள்ள இடதில் சொக்கபான் ஏற்றி சுவாமிக்கு ரசை சாற்றப்பட்டது என்ற விபரத்தினை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்., மற்ற நாட்களில் மலைமீது தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us