திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சுவாமிநாதன் கடந்த 1ஆம் தேதி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோர் தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. 

Advertisment

அந்த வகையில் இன்று இன்று (18.12.2025) விசாரணைக்கு வந்தது. அதன்படி இது தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்பட்டு அனைத்து தரப்பு வாதங்களையும் இன்று (18.12.2025) பதிவு செய்து கொண்டனர். அதன் ஒரு பகுதியாக அரசு தரப்பில் வாதிடுகையில், “மலை உச்சியில் உள்ள தூண் தீபத்தூணை அல்ல. அது தீபத்தூண் என்று மனுதாரர்கள் சான்று அளித்தால் அரசு தரப்பில் அங்குத் தீபம் ஏற்றுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தூணில் கடந்த 100 ஆண்டுகளாகத்  தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. திடீரென்று ஒரு பழக்க வழக்கத்தை மாற்றக் கூறுவது ஏற்புடையது அல்ல. இதுபோன்ற பழக்க வழக்கங்களை இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் தான் முடிவு செய்ய வேண்டும்.

Advertisment

எனவே தனி நீதிபதி எந்தவிதமான நேரடி உத்தரவும் பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் வாதிடுகையில், “ஏற்கனவே நீதிபதி கனகராஜ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் தனி நீதிபதி அதிகார வரம்பிற்கு உட்பட்டு மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் எனவே இது குறித்து நீதிபதி உரிய விதிமுறைகள் பின்பற்றித் தான் கூறியுள்ளார்” என வாதிட்டார். இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த மனுவைத் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்புக்காக ஒத்தி வைத்தனர்

judgement

மேலும் திருப்பரங்கொண்ட மலை உச்சியில் தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர், ஏ.டி.ஜி.பி. ஆகியோர் நேரில் அல்லது காணொளியில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். அந்த மனுவை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தெரிவித்தனர்.

Advertisment