மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘இந்தாண்டு கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் உள்ள தீபத் தூணில் அல்லாமல் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இது ஏற்றத்தக்கது அல்ல. திருப்பரங்குன்றம் மலையில் காலம் காலமாக மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. எனவே அதற்கான அறிவிப்பை நீதிமன்றம் உறுதி செய்து ஒரு உத்தரவாக வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தார். அதன் அடிப்படையில், இந்த வழக்கில் பல்வேறு தரப்பினரும் ஒரு மனுதாரராக இணைத்து வழக்கை நேற்று (03.12.2025) தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார். அதன்படி கார்த்திகை தீபத் திருநாளான நேற்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் கோயில் அருகில் கார்த்திகை தீபத்தை ஏற்றினர்.
அப்போது அங்கு கூடியிருந்த இந்து அமைப்பினர், நீதிமன்ற உத்தரவுப்படி தூணில் தீபம் ஏற்றவில்லை என்று காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை உடைத்து மலை மீறி ஏற முயற்சி செய்ததால் அங்கு இந்து முன்னணி அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளில் போலீசார் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/04/thiruparankundram-issue-2025-12-04-11-15-42.jpg)
இதனையடுத்து விசாரணைக்கு ஏற்று இன்றைய தினம் (04.12.2025) முதல் வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்திருந்தார். அதோடு வழக்கு எண் இடப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஜெயச்சந்திரன் அடங்கிரு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று காலை, முதல் வழக்காக திருப்பரங்குன்றம் தீப வழக்கின் விசாரணை தொடங்கியது. அப்போது அரசு தரப்பில் வாதிடுகையில், “உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே சி.எஸ்.ஐ.எப். (C.I.S.F.) படையினரின் பணி ஆகும். அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே வரும், அதைத்தாண்டி இல்லை.
மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். அதோடு போலீசார் தரப்பில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர், மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது” என வாதிட்டார். இவ்வாறு அரசின் வாதம் முன் வைக்கப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/04/madurai-high-court-our-2025-12-04-11-14-59.jpg)