Thirumavalavan's obsessed says Don't give us advice
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக சென்னை எழும்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.
அதில் அவர், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை நாம் ஒருபுறம் எதிர்த்தாலும், இன்னொரு புறம் வாக்காளர் பட்டியலில் பெயரை இடம்பெறச் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொண்டு தான் ஆக வேண்டும் என்ற அளவுக்கான ஒரு நெருக்கடியை இந்த ஆட்சியாளர்கள், சூழ்ச்சியாளர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கு தான் பாஜக எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை மேற்கொள்கிறது. மாநில கட்சிகளை பா.ஜ.க அழித்து வருகிறது.
மாநிலங்களில் வளர்கிற மாநில கட்சிகளில் ஊடுருவி, அந்த கட்சிகளோடு கூட்டணி வைத்து எந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கிறார்களோ, அந்த கட்சிகளை காலி செய்வது தான் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டங்கள். அதிமுகவுக்கு இது குறித்து அறிவுரை கூறியும் அதை அவர்கள் ஏற்கவில்லை. பாஜகவை எதிர்ப்பதால் என்னை குறி வைத்து அவதூறு பரப்புகின்றனர். எங்களுடைய உயரம் எங்களுக்குத் தெரியும். யாரும் எங்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டாம்” என்று ஆவேசமாகப் பேசினார்.
Follow Us