பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா ஆகியவைகளை நிகழ்ச்சியை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ‘விஜில்’ என்ற பிரிவு கடந்த 11ஆம் தேதி சென்னையில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பாரதியாரை பாராட்டி, திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
குறிப்பாக அவர், “பாரதியாரை நிராகரிக்கும் இடத்தில் என் தமிழ் நிராகரிக்கப்படுகிறது. பாரதியாரைப் பற்றி பேசுவது என்றால் பாகிஸ்தானில் கூட பேசுவேன். எந்த பிராமண எதிர்ப்பை காட்டி நீ திராவிட இருப்பை கட்டினியோ, அந்த பிராமண கடப்பாரையை கொண்டு இந்த பாலடைந்த கட்டடத்தை இடிப்பேன்” என்று கூறினார். ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய கொள்கைகளை கொண்டு சேர்க்கும் பணியை விஜில் அமைப்பு செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டு சர்ச்சையானது. எதிர் சித்தாந்தம் உடைய அமைப்பின் மேடையில் சீமான் பேசியது, கடும் விமர்சனங்களைக் கிளப்பியது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக, சீமான் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை எனப் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் திருமாவளவன் கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், சீமான் மீது திருமாவளவன் மீண்டும் விமர்சனம் செய்துள்ளாஅர். மதுரை பெருங்குடி அம்பேத்கர் சிலை முன்பு டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுடன் விசிக தலைவர் திருமாவளவன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “சீமான் முன்னெடுக்கிற தமிழ் தேசிய அரசியலை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்றி, இருக்கிறோம். அவர் பேசுகிற அரசியலில் பெரியார் வெறுப்பு ஆழமாக இருக்கிறது. பெரியாரை அம்பலப்படுத்தி அவருடைய பிம்பத்தை தகர்த்து அவர் கட்டி எழுப்ப விரும்புகிற தமிழ் தேசியம் தமிழ் தேசியமா? என்ற கேள்வி எழுகிறது. பார்ப்பனர்கள் எப்படி பெரியாரை எப்படி விமர்சிக்கிறார்களோ அதைப் போலவே அவரும் விமர்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சீமான் பேசுவது திமுக என்கிற ஒரு தேர்தல் கட்சியை மட்டும் எதிர்க்கவில்லை. இவர் ஒரு தேர்தல் கட்சி, அது ஒரு தேர்தல் கட்சி. ஆனால், அவர் அடிப்படை தத்துவத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். விளிம்புநிலை மக்கள் உயர்த்தி பிடிக்கும் பெரியார் அரசியல், அம்பேத்கர் அரசியல் ஆட்சி அரசியலாக இருக்கிறது என்பது தான் எங்கள் புரிதல். பெரியார் அரசியலை எதிர்க்கிறார் என்றால் அவர் அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற மாமனிதர்களின் கொள்கைகளையும் அவர் விமர்சிக்கிறார், எதிர்க்கிறார். தமிழ் தேசிய கடப்பாரை கொண்டு இந்த திராவிட இயக்க அரசியலை வீழ்த்துவேன் என்று சொல்லி இருந்தால் அதில் ஒரு பொருள் இருக்கிறது. ஆனால், பிராமண கடப்பாரையை கொண்டு நான் திராவிட இருப்பை தகர்ப்பேன் என்று சொல்லுகிறார் என்றால் இவர் பிராமணர்களின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கிக் கொண்டாரோ என்கிற கவலை இருக்கிறது. சொல்லப்போனால் எச். ராஜா பேசுகிற அரசியலை அப்படியே பேசுகிறார். அல்லது குருமூர்த்தி விரும்புகிற அரசியலை அப்படியே பேசுகிறார். ஆர்எஸ்எஸ் என்ன நினைக்கிறதோ அதை பிரதிபலிக்கிறார். இந்த நிலையிலிருந்துதான் விடுதலை சிறுத்தைகள் அவருடைய கருத்தை நாங்கள் விமர்சித்தோமே தவிர மற்றபடி அவர் மீது எங்களுக்கு தனிப்பட்ட எந்த வெறுப்பும் இல்லை. உள்நோக்கமும் இல்லை” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/30/seethi-2025-12-30-08-38-06.jpg)