தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை (எஸ்.ஐ.ஆர்) நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது. அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று (19-12-25) வெளியானது. அதில், எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆருக்கு முன் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேர் வாக்காளர்களாக உள்ளனர். எஸ்.ஐ.ஆரின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

Advertisment

எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பு, இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “எஸ்ஐஆர் மூலம் அவர்கள் நீக்கப்போகிற வாக்காளர்கள் யாரும் அண்டை நாட்டிலிருந்து ஊடுறியவர்கள் அல்ல. இந்த  நாட்டின் பூர்வீக குடிமக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு என்ன  காரணம் என்று தெரியவில்லை. அவர்கள்  எஸ்ஐஆரை அறிமுகப்படுத்துகிற போது சொன்ன வார்த்தை, அண்டை நாடுகளில் இருந்து இங்கே  ஊடுருவி ஆதார் அட்டைகளையும், வாக்காளர் அட்டைகளையும் பெறுகிறார்கள். அவர்களுக்கு வாக்களிக்கக்கூடிய உரிமையை தர முடியாது. ஆகவே வாக்குரிமையை நாம் அவர்களுக்கு வழங்க கூடாது என்கிற அடிப்படையில் தான் இந்த தீவிர சிறப்பு  சீராய்வு திட்டத்தை நாங்கள்  அறிமுகப்படுத்துகிறோம் என்று சொன்னார்கள்.    

Advertisment

பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் 47 லட்சம் பேரில் 300 பேர் கூட அண்டை  நாடுகளில் இருந்து வந்தவர்கள் இல்லை என்ற கருத்து வெளியாகி இருக்கிறது. பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் 47 லட்சம் பேரில் 300 பேர் கூட அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்கள் இல்லை என்ற கருத்து வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் நீக்கப்படும் ஒரு நிலை இருப்பதாக  தெரிய வருகிறது. இன்றைக்கு அது உறுதிப்படுத்தப்படும் என்று நான் கருதுகிறேன். நீக்கப்படுகிற ஒவ்வொருவரும் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்  தான், மண்ணின் மைந்தர்கள் தான், பூர்வீக குடிகள் தான். இவர்களை எதற்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்? இவர்கள் யார் அண்டை நாட்டிலிருந்து ஊடுருவிய அந்நியர்கள்?. ஆகவே இவர்களுக்கு  ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது. ஒரு நீண்ட கால செயல் திட்டம் இருக்கிறது.  

வாக்குரிமையை பறித்து குடியுரிமையை  பறிக்கிற நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட இருக்கிறார்கள் என்பதுதான் நம்முடைய  யூகமாக இருக்கிறது. இதற்கு  எதிர்கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கூட அவர்கள் இதை தேர்தல் ஆணயத்தை பயன்படுத்தி  நடைமுறைப்படுத்துகிறார்கள். வாக்குரிமையை பரிசோதிக்கிறோம் என்கிற பெயரால் குடியுரிமையை பரிசோதிக்கிற நிலைப்பாட்டை தேர்தல் ஆணயத்தின் மூலம்  நடைமுறைப்படுத்துகிறார்கள். தேர்தல் ஆணயத்திற்கு அந்த அதிகாரமே இல்லை. சிஏஏ  என்கிற குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம்  எந்த வகையிலும் முகாந்தரம் கொண்டிருக்கவில்லை. ஆனால் பாஜக அரசு எல்லாவற்றையும் தான்தோன்றித்தனமான முறையில் அணுகுகிறது. குடிமக்களின் குடியுரிமையை பறிக்கிற செயலில் ஈடுபடுகிறது. இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தான ஒரு நிலைமை  என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி நாட்டு மக்களுக்கு சுட்டிக்காட்டுகிறது” என்று கூறினார். 

Advertisment