கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகியான திருமா ரமேஷ் என அழைக்கப்பட்ட பண்ருட்டி ரமேஷ் மாரடைப்பால் திடீரென காலமான செய்தி, கட்சித் தொண்டர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசிக தலைவர் தொல். திருமாவளவனை தோற்றத்தில் ஒத்திருந்த பண்ருட்டி ரமேஷ், கட்சி வட்டாரங்களில் "திருமா ரமேஷ்" என்றும், "எழுச்சித் தமிழரின் அன்புத் தம்பி" என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.
திருமாவளவனின் கொள்கைகளை உளமார ஆதரித்து, கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த இவர், உள்ளூர் மக்களிடம் வெள்ளந்தியான மனிதராகவும், எளிமையான தொண்டராகவும் அறியப்பட்டார். சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தீவிரமாக இருந்த ரமேஷ், திருமாவளவன் பேச்சுகளுக்கு லிப்சிங்க் செய்து, பாடல்களுக்கு வாயசைத்து நிறைய காணொளிகள் (ரீல்ஸ்) வெளியிட்டு வந்தார். இவை விசிக ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவரது வீடியோக்கள், கட்சிக் கொள்கைகளை உற்சாகமாக பரப்பியதால், ஆயிரக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார். "வெள்ளந்தியான மனிதன்" என்று பாராட்டப்பட்ட அவரின், திடீர் மரணம் கட்சிக்காரர்கள் மற்றும் கட்சி சார்பற்ற பலருக்கும் அதிர்சியை கொடுத்துள்ளது.
அவரது இறுதிச் சடங்கு நாளை (16.12.2025) மாலை பண்ருட்டியில் நடைபெற உள்ளது. இதனையொட்டி அவரது உடலுக்கு திருமாவளவன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்ருட்டி ரமேஷின் மறைவு, விசிக குடும்பத்துக்கு பேரிழப்பு என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/15/thiruma-pm-2025-12-15-22-11-04.jpg)
இந்நிலையில் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தம்பி பண்ருட்டி ரமேஷின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையிலிருந்தார். இன்று திடுமென நெஞ்சுவலி ஏற்பட்டு கடலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது மகனைத் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்தேன். ஆறுதல் கூறினேன். தம்பி ரமேஷூக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/15/pantrutti-ramesh-thiruma-2025-12-15-22-09-44.jpg)