Advertisment

இருசக்கர வாகனத்தில் மோதிய திருமாவின் கார்?- தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர்

a5434

Thiruma's car collides with a motorcycle - lawyer attacked Photograph: (vck)

உச்சநீதிமன்ற நீதிபதி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று விசிக வழக்கறிஞர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள விசிக தலைவர் திருமாவளவன் வந்திருந்தார். போராட்டம் முடிந்து உயர்நீதிமன்ற வளாகம் அருகே உள்ள ஆவின் பாலகம் அருகே காரில் சென்றுகொண்டிருந்த போது முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது திருமாவளவன் பயணித்த கார் மோதியதாகக் கூறப்படுகிறது. வாகனத்தை நிறுத்திய அந்த நபர் காரில் இருந்தவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

அப்போது அங்கு இருந்த விசிக தொண்டர்கள் அந்த நபரைக் கண்மூடித்தனமாக தாக்கினர். மேலும் அந்த இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டனர். போலீசார் முன்னிலையிலேயே நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக போலீசார் வழக்கறிஞரான ரஜீவகாந்தி என்று கூறப்படும் தாக்குதலுக்கு உள்ளான நபரை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.  

Advertisment
Chennai vck thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe