Thief steals old woman's gold chain in a unique way
சிதம்பரம் ககைசபைநகரில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் நாதன முறையில் மர்ம நபர் ஒருவர் 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் கனகசபை நகர் முதலாவது குறுக்கு தெருவில் வசிப்பவர் நடராஜன் மனைவி விஜயலட்சுமி (83). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று (13-11-25) காலை ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து அருகாமையில் வீடு வாங்கி உள்ளேன், எனவே என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் என கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த விஜயலட்சுமியிடம், தனது கவரிங் செயினை அவரது கழுத்தில் அணிவித்து ஆசீர்வாதம் பெறுவது போல் பெற்று மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை மாற்றி பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இது குறித்த போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் நகர காவல் நிலைய ஆய்வாளர் சிவானந்தன் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Follow Us