கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் விஜயலட்சுமி ஹண்டி (சுஜாதா) என்ற பாஜக நிர்வாகி, எஸ்.ஐ.ஆர். பணிகளை ( SIR - BLO) மேற்கொண்டு வரும் அதிகாரிகளை கேசவப்பூர் ராணா பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கு உதவியதாகக் குற்றம் சாட்டி அவர் மீது காங்கிரஸ் கவுன்சிலர் சுவர்ணா கல்குன்ட்லா புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் கேசவப்பூர் காவல் நிலைய காவல்துறையினர் சுஜாதாவைக் கைது செய்ய முயன்றனர். ஆனால், அப்போது சுஜாதா தனது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதிகாரிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. 

Advertisment

இது சம்பந்தமாக, அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டு, இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 307 உட்படப் பல பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தக் கைது நடவடிக்கையின் போது காவல்துறையினரால் தான் தாக்கப்பட்டதாகவும், ஆடைகள் களையப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவில், ஒரு பேருந்தில் சுஜாதாவை  ஆண் மற்றும் பெண் காவலர்கள் பலர் சூழ்ந்திருப்பது தெரிய வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

இந்நிலையில், பாஜக தலைவர்கள் காவல்துறையின் இந்த நடவடிக்கையை “இது மனிதாபிமானமற்ற செயல் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்று கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து, ஹுப்பள்ளி - தார்வாட் காவல் ஆணையர் சஷி குமார் கூறுகையில், “ஜனவரி 5ஆம் தேதி, ஒருவர் அளித்த கொலை முயற்சிப் புகாரின் அடிப்படையில் சுஜாதா கைது செய்யப்பட்டுள்ளார். 

arrest

அப்போது வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​அவர் தனது ஆடைகளை அணிந்திருந்தார். பின்னர் வாகனத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, அவரே தனது ஆடைகளைக் கழற்றி எறிந்துவிட்டார்” என்றார். இதனையடுத்து பெண் காவலர்கள், உள்ளூர் மக்களின் உதவியுடன், அவரது ஆடைகள் சரிசெய்யப்பட்டதை உறுதி செய்ததாகவும்” கூறினார்.

Advertisment