புதுக்கோட்டை நகரில் தெற்கு 4ஆம் வீதியில் பல் மருத்துவமனை நடத்தி வருபவர் மூக்கம்பட்டியைச் சேர்ந்த மருத்துவர் ஆனந்த் (32). ஒரே கட்டடத்தின் கீழே கிளினிக்கும் மேலே வீடும் உள்ளது. நேற்று (20.12.2025) மதியம் மருத்துவர் ஆனந்த் கீழே உள்ள கிளினிக் வந்து விட, அவர் மனைவி கறம்பக்குடியில் உள்ள தனது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார். மதிய நேரத்தில் மருத்துவம் பார்க்க யாரும் வராததால் செவிலியர்களிடம் சொல்லிவிட்டு டீ கடைக்கு சென்றுள்ளார். மேலே உள்ள வீட்டிற்குச் செல்லும் படிக்கட்டில் உள்ள கேட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். 

Advertisment

மருத்துவர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் செவிலியர்கள் வெளியே வரும் போது ஊதா பனியன் அணிந்த ஒரு இளைஞன் மேலே வீட்டிற்குச் செல்லும் படிக்கட்டு கேட்டில் ஏறி வெளியே குதிப்பதைப் பார்த்த செவிலியர்கள் நீங்க யாரு ஏன் கேட் ஏறி குதிக்கிறீங்க என்று கேட்க சார் பிளம்பிங் வேலை பார்க்க வரச் சொன்னார். ஆனால் இப்ப சார் இல்லை நான் அப்பறம் வருகிறேன் என்று செவிலியர்களிடம் சொல்லிக் கொண்டே சாலையில் இறங்கி அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டார். வெளியே சென்றிருந்த மருத்துவருக்கு, போன் செய்த ஒரு செவிலயர், சார் பிளம்பிங் வேலைக்கு வரச் சொன்னீங்கனு ஒருத்தர் வந்து கேட் ஏறிக் குதிச்சு வீட்டுக்கு போய் பார்த்துட்டு ஆள் இல்லைன்னு மறுபடி கேட் ஏறிக் குதிச்சு வெளியே போயிட்டார் என்று சொல்ல திடுக்கிட்ட மருத்துவர் நான் யாரையும் வரச் சொல்லவில்லையே என்று சொல்லிக் கொண்டே சிறிது நேரத்தில் வந்து மேலே உள்ள வீட்டிற்குச் சென்று பார்த்ததும் பதறியுள்ளார். 

Advertisment

கீழே கிளினிக்கில் ஆள் இருப்பதால் மேலே வீட்டின் கதவுகளை பூட்டாமல் கேட் கதவுகளை மட்டும் பூட்டி வைத்திருந்தேன். வந்தவன் கேட் ஏறிக் குதிச்சு போய் பூட்டாத வீட்டை திறந்து மேஜையில் கிடந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து 21 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு சென்றுவிட்டதும், ஆனால் பணத்தை திருடவில்லை என்பதும் தெரிய வந்தது. உடனே நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க சம்வப இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அவன் ஏறிய ஆட்டோவை அடையாளம் கண்டு விசாரித்தனர். அப்போது அந்த ஊதா பனியன் இளைஞனை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டது தெரிய வந்தது. பேருந்து நிலைய கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது ஒரு பெட்டிக்கடையில் பொருட்கள் வாங்கியதும் தெரிந்தது. 

arrest

சிசிடிவி பதிவுகளை வைத்து பட்டப்பகலில் திருடிச் சென்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், குறிப்பிட்ட நேரத்தில் வீட்டில் ஆள் இல்லை, மருத்துவரும் வெளியே சென்று 10 நிமிடத்திற்குள் வந்துவிடுவதற்குள் கேட் ஏறிக்குதித்து திருடி செல்லும் அளவிற்கு யார் கண்காணித்து திருடனிடம் சொல்லி இருப்பார்கள்? என்ற கோணத்திலும் போலிசார் விசாரனையை நடத்தி வருகின்றனர்.

Advertisment