Advertisment

'பொறாமையில் பேசுகிறார்கள்; இன்னும் பேசுவார்கள்'-அன்புமணி பேட்டி

735

'They speak out of jealousy; they will speak even more' - Anbumani interview Photograph: (pmk)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகம் எடுத்திருக்கிறது. பாமகவின் அன்புமணி ராமதாஸ் தரப்பு அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் இன்று அன்புமணியின் பனையூர் அலுவலகத்தில் பாமக சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுக்கப்பட்டோரிடம் நேர்காணல் நடைபெற்றது.

Advertisment

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''நல்ல வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. எங்களுக்குள்ளே நல்ல ஒருங்கிணைப்பு இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளிடம் அன்றாடம் பேசிக்கொண்டிருக்கிறோம்.  எங்கள் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். அடிமட்ட தொண்டர்கள் வரை எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து தொண்டர்களும் அவ்வளவு சந்தோஷமாக உள்ளார்கள். நல்ல புரிதல் வைத்துக்கொண்ட வேகமாக களத்தில் செயல்படுகிறார்கள்.  திமுகவில் களத்தில் யாரும் கிடையாது. பயத்தில் இருக்கிறார்கள். நாங்கள் சேர்ந்தவுடன் அவர்களுக்கு மேலும் பயம் வந்துவிட்டது. இனிமேல் பார்த்தீர்கள் என்றால் நாங்கள் வேகமாக போவோம். அவர்கள் ஸ்லோவாக போவார்கள்.

Advertisment

இனிமேல் திமுக எவ்வளவு பொய் சொன்னாலும் அதை நம்பமுடியாது. திமுகவின் ஐந்தாண்டு கால நரக ஆட்சி, பெண்களுக்கு எதிரான கஞ்சா ஆட்சி. போதைப்பொருள் ஆட்சி. எனவே திமுகவை மக்கள் தூக்கி எறிய முடிவு செய்துவிட்டார்கள். அந்த பயத்தில் திமுக கூட்டணியினர் பேசி வருகின்றனர். எங்கள் மேல் உள்ள பொறாமையில் இன்னும் பேசுவார்கள்'' என்றார். 

anbumani ramadoss Election pmk politics
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe