'பந்தா காட்ட மட்டும் வருவார்கள்; இதுவரை ஒன்னும் செய்யவில்லை'-கழிவுநீர் தேங்கியதால் ஆவேசமான மக்கள்

a4672

'They only come to show Bandha; nothing has been done so far' - People angry over stagnant sewage Photograph: (thiruvallur)

திருவள்ளூர் மாவட்டம் மேலானூர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த பகுதி மக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பும் வீடியோக்கள் தற்பொழுது இணையங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பகுதி மக்கள் வைத்துள்ள குற்றச்சாட்டில், 'சின்ன மழைக்கே இந்த பகுதியில் இப்படி கழிவுநீர் நிற்கிறது. பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சாலையும் போட மாட்டேன் என்கிறார்கள். பள்ளமாக இருக்கிறது. எப்படி பள்ளி செல்லும் பிள்ளைகள் நடந்து போவார்கள். இந்த நாற்றம் பிடித்த சேற்றுத் தண்ணீரில் குழந்தைகள் நடந்து செல்கின்றனர். அப்படி நடந்தால் குழந்தைகளுக்கு நோய் நொடிகள் வராதா?

பந்தா காட்டுவதற்கு நான்கு காரில் மூன்று காரில் வருவார்கள். ஊர் முழுக்க பந்தா காட்டுவார்கள். ஆனால் இதுவரை ஒன்னும் செய்யவில்லை. முடியாது என்று சொல்லுங்கள் நாங்களே மண்ணைக் கொட்டிக் கொள்கிறோம். உங்கள் வீட்டுப் பக்கத்தில் இப்படி இருந்தால் கம்முன்னு இருப்பீங்களா? வருடத்திற்கு ஒருமுறை வருவார்கள். நான் முடித்து விடுகிறேன், பண்ணி விடுகிறேன் என்று சொல்வார்கள். ஆனால் எதையுமே செய்யமாட்டார்கள். இதைச் சொன்னதால் என்மேல் என்ன ஆக்சன் கூட எடுத்துக் கொள்ளுங்கள்' என்று ஆவேசமாகத் தெரிவித்தனர்

dmk people Sewage thiruvallur
இதையும் படியுங்கள்
Subscribe