Advertisment

“அவர்கள் எல்லோரும் பெரிய தியாகிகள் கிடையாது” - விஜய்யின் முன்னாள் மேலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!

vijay-pa-selvakumar-dmk-pm

த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார், இன்று (11.12.2025) தி.மு.க.வில் இணைந்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அவர் (விஜய்) ஒரு நடிகர். அவருடன் பணியாற்றும் போது அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்ற எண்ணத்தில் நானும் அவர் கூட இருந்து கட்டமைத்தவன் தான். கலப்பை மக்கள் இயக்கத்தை எப்படி கட்டமைத்து அதை ஒழுங்காக நடத்துகிறனோ, அதே போன்று விஜய் மக்கள் இயக்கத்துக்கும் நான் ஒரு மிகப்பெரிய ஒரு பில்லராக இருந்து பணியாற்றியவன் என்று அவர்களே கூறி இருக்கிறார்கள். 

Advertisment

கால போக்கில் நிறைய பேர் புதுசு புதுசாக உள்ள வருகிறார்கள். அவர்கள் மன்னிலையில் எங்களை மாதிரி, அவரின் அப்பாவே உள்ளே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி இருக்கையில் எங்களை மாதிரி ஒரு மனசு ஒத்தவர்கள் அங்கு பயணம் செய்ய  முடியாத ஒரு சூழல் ஏற்படுகிறது. என்னைக்குமே நிலவு நிலவுதான். நிலவு ஒரு குறிப்பிட்ட காலம் தான் இருக்கும். ஒரு நட்சத்திரம் மாதிரிதான் விஜய். அவர் ஒரு நிலவு போல ஒரு குறைந்தது ஒரு 15 நாள் இருப்பார். 15 நாள் நிலவு எப்படி மறைந்து போகுமோ அதேபோல நடிகர்களுடைய சேவையும் அப்படித்தான் இருக்கும். மக்களையோ ரசிகர்களையோ  அவர் சரியான முறையில் வழிநடத்தி சரியான அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வாரா என்று எனக்கு தெரியவில்லை.

Advertisment

எனக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். என் உயிர் பொருள் ஆவி எல்லாத்தையும் இந்த மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு  நல்ல கட்டமைப்பு தேவைப்பட்டது. அந்த கட்டமைப்பு எனக்கு இன்னைக்கு இருக்கும் சூழலில் திமுக மிக சிறப்பாக செய்து கொண்டு  இருக்கிறார்கள். எனவே அங்கு இணைந்து கொண்டேன். என்னை வரவேற்கிறார்கள். ஆனந்த், ஆதவ் ஆர்ஜூனா என எல்லோரையும் எடுத்துக்கொள்ளுங்கள். (இதனைக் கூற பயம் என்ன வேண்டி இருக்கு). இன்னைக்கு கடைசியில் சேர்ந்த நாஞ்சல் சம்பத்து முதல் எல்லோரும் பெரிய தியாகிகள் கிடையாது. அவர் ஒரு மாற்றமான அரசியல் கொண்டு வர வேண்டும் என்று சொன்னார். ரசிகர் மன்றத்திற்காக உழைத்தவர்களுக்கு, எனக்கு போஸ்டர் ஓட்டியவர்களுக்கு, பால் ஊற்றியவர்களுக்குதான் நான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று சொன்னார். 

vijay-pa-selvakumar-dmk

இன்னைக்கு இருக்கிற ஒரு ஏழு பேரின் பெயரை சொல்கிறேன். ஏழு பேரும் ஏதாவது ரசிகர் மன்றத்தில இருந்தவங்களா?. ஆனந்தாக இருக்கட்டும், வெங்கட்ராமனாக இருக்கட்டும், நிர்மல் குமாராக இருக்கட்டும், ஆதவா இருக்கட்டும் நாஞ்சில் சம்பத்தாக இருக்கட்டும் செங்கோட்டையனாக இருக்கட்டும் யாருமே ரசிகர்களாக இருந்து அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் உழைத்தவர்கள் தியாகம் செய்தவர்கள் யாரும் அதில் இல்லை. அதனால்தான் அந்த வேதனையை இப்போது கூறுகிறேன்.  நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தேன் என்று பத்திரிகையாளர்களுக்கு தெரியும் நான் அவமானப்பட்டு ஒதுங்கி சந்திரமுகி மாதிரி, நீலாம்பரி மாதிரி என்னால் ஒதுங்கி இருக்க முடியாது. நான் களத்தில் இறங்கி வேலை பார்க்க கூடியவன்” என ஆவேசத்துடன் பேசினார். 

dmk anna arivalayam manager mk stalin Tamilaga Vettri Kazhagam tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe