தமிழ்நாட்டில் காவல்துறை அதிகரிகளின் வீட்டில் ஒருவர் கூட ஆர்டலியாக இல்லை என்பதை ஏற்கமுடியவில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. காவல் துறையில் ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வு குற்றம் சாட்டியிருந்தது.
இதற்குபதிலளிக்கும் வகையில், டிஜிபி அலுவலகத்தில் இருந்து "யாரையும் ஆர்டலிகளாக பயன்படுத்தக்கூடாது" என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உயநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் அறிக்கையில் தற்போது பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற எந்த அதிகாரியின் வீட்டிலும் ஆர்டலிகளாக ஒருவர் கூட இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆர்டலிகள் குறித்து செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த கருத்தை தங்களால் ஏற்க முடியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த மாநில அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழ்நாட்டில் ஒருவர் கூட ஆர்டாலிகளாக இல்லையென்றும், அப்படி இருப்பதாக யாரேனும் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், உயரதிகாரிகளின் வீடுகளில் தோட்ட வேலைகள், தூய்மைப் பணிகள் மற்றும் இதர வேலைகளில் கீழ்நிலைப் பணியாளர்களை ஈடுபடுத்தும் "ஆர்டலி முறை" சிறைத்துறையைப் போலவே காவல்துறையிலும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.
அதேபோல, பணியில் இருப்பதாகக் கூறிவிட்டு, தனி்ப்பட்ட வேலைகளில் ஈடுபடும் காவலர்களையும், காவல் துறை அதிகாரிகளையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுதொடர்பாக என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்தும், தகவல் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Follow Us