ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நாளை 18ஆம் தேதி (18.12.2025) காலை 11.00 மணிக்கு தவெக கட்சித் தலைவர் விஜய்யின் ‘ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை அக்கட்சியின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் கட்சி தரப்பிலும் செங்கோட்டையன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செங்கோட்டையன் இன்று (17-12-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் விஜய் சிறப்புரை நல்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை நான்கே நாட்களுக்குள் மிக பிரமாண்டமாக பணிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கடுமையான பணியை மூன்றே நாட்களுக்குள் முடித்து சிறந்த முறையில் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற அளவிற்கு இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எங்களை பொறுத்தவரையிலும் தேவையான வசதிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். காவல்துறை கண்காணிப்பாளர் இங்கே பார்வையிட்டு சென்றிருக்கிறார். ஆகவே அதற்கான பணிகள் என்னென்ன பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரோ அத்தனை பணிகளையும் நிறைவேற்றி தேவையான வசிகளை கூடுதலாக செய்யப்பட்டிருக்கிறது'' என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் 'திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதியாக இருப்பது குறித்து தமிழக முன்னாள் பாஜக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்' என்ற கேள்விக்கு, ''இதற்கெல்லாம், பாஜக முன்னாள் தலைவருக்கெல்லாம் பதில் சொல்லும் நேரமில்லை. எங்கள் கூட்டத்தைச் சிறப்பாக நடத்துவதற்குதான் ஆயத்த பணிகளை மேற்கொண்டிருக்கிறோமே தவிர மற்ற ஒவ்வொருவரின் கருத்துக்கும் பதில் சொல்ல முடியுமா எனக் கேட்டால் அதற்கான நிலையில் இல்லை. நாளை நடக்கும் நிகழ்ச்சி குறித்துதான் நாங்கள் அக்கறை எடுத்துக்கொண்டிருக்கிறோம்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/17/a5861-2025-12-17-18-53-16.jpg)