எக்ஸ்பிரியான அரசியல்வாதி டி.டி.வி.தினகரன் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளது.
நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''சினிமா உலகத்தில் கடுமையான போட்டியில் இருந்த பொழுதும் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட விஜய் நீங்கள் நினைக்கின்ற மாதிரி இல்லை. இதை நான் விஜய்க்கு பிஆர்ஓவாகவோ சொல்லவில்லை. 30 ஆண்டு அரசியல் அனுபவத்தில், மாபெரும் தலைவர் கூட 23 வயதிலிருந்து இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். யார் மீதும் பொறாமையோ, பயமோ இல்லாமல். ஒரு குடிமகனாக பார்க்கும் பொழுது விஜய்க்கு பட்டி தொட்டி எல்லாம் அவருடைய பெயர் தெரியும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/25/a5633-2025-10-25-17-12-13.jpg)
விஜயகாந்த் உருவாக்கியதை விட மிகப்பெரிய இம்பேக்ட் உருவாக்குவார் என்று சொல்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன் எடப்பாடி பழனிசாமி மீது உள்ள தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக சொல்லவில்லை. இன்றைக்கு பழனிசாமி இரட்டை இலை இருக்கின்ற காரணத்தினாலும், பணம் பலத்தால் தான் அவரால் சுழன்று கொண்டிருக்கிறார். இந்த தேர்தலில் அவர் 15 சதவீதத்திற்கு குறைவாக வாக்கு சதவீதத்தை அடைவார். மிகப்பெரிய இம்பேக்ட் விஜய்யினால் இருக்கும். விஜய் இரண்டாவது இடத்திற்கு வருகின்ற வாய்ப்பு இருக்கும்.
சரியான கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணிக்கு சரியான போட்டியாக அது அமையும். இதனால் பழனிசாமி தலைமையிலான அணி மூன்றாவது இடத்திற்கு எதார்த்தமாக ஆட்டோமேட்டிக்காக போய்விடும். விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அதிமுகவை சேர்த்துக் கொள்வதற்கு யோசிப்பார். ஏனென்றால் பழனசாமி எப்பொழுதுமே அமாவாசை வேலை தான் பார்ப்பார். விஜய் அதிமுவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்''என்றார்.
இந்நிலையில் மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த ஆர்.பி.உதயகுமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் அதிமுகவுடன் தவெக கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமமானது என தெரிவித்த டி.டி.வி.தினகரனின் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், ''இந்த கருத்து சொன்னவரைப் பற்றி பேச தேவையில்லை. ஏனென்றால் அவருக்கு மீடியா வெளிச்சம் இல்லை என்றால் அவரை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடுவார்கள். ஏதாவது மக்கள் பணியை பற்றிப் பேச சொல்லுங்கள். மக்களுக்கான திட்டங்கள் பற்றி பேச சொல்லுங்கள் அவரை எதாவது மக்கள் பணி செய்யச் சொல்லுங்கள். அதன் பிறகு மக்கள் தலைவர்களை பற்றி பேச சொல்லுங்கள். எக்ஸ்பிரி ஆன அரசியல்வாதி பற்றி விவாதிக்க அவசியம் இல்லை'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/25/a5635-2025-10-25-17-11-23.jpg)