பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு 2026-27ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து 9வது முறையாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து 9வது முறையாக தாக்கல் செய்து உரையாற்றினார். அதில் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளை பொறுத்த வரையில், “பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். பழவேற்காடு ஏரியில் பறவை கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.
ஐதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூரு இடையே அதிவிரைவு ரயில் தடம் உருவாக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் அரிய வகை கனிமங்களுக்கான வழித்தடத் திட்டம் உருவாக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''ஒரு பெண்ணாக, பைனான்ஸ் மினிஸ்டராக அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடுக்கு அதிகமாக நிறைகளும் இருக்கு குறைகளும் இருக்கு. சென்னை-பெங்களூர், சென்னை-கொல்கத்தா என்று நிறைய ட்ராக் ரயில் ட்ராக்ஸ் கொடுத்திருக்காங்க. ரயில்வே திட்டங்களை அறிவிச்சிருக்காங்க. அது தமிழ்நாட்டுக்கு வரவேற்க கூடிய ஒரு விஷயம். அதேபோல 40,000 கோடி பயோ ஆர்கானிக் விவசாயத்திற்கு ஒதுக்கி இருக்காங்க. இதனால் நிச்சயமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு விவசாயிகளுக்கு நிச்சயம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே மாதிரி இன்னைக்கு சாலை வசதி, இன்ப்ராஸ்ட்ரக்சருக்கு பல்லாயிரம் கோடி ஒதுக்கி இருக்காங்க. நாகர்கோவிலும் ஒரு ஸ்மார்ட் சிட்டி தான். இந்த முறை நிச்சயம் அந்த பட்ஜெட் நாகர்கோவிலில் சிறந்த முறையில் தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாறுவதற்கு அந்த திட்டம் வரவேற்கக்கூடிய விஷயம்.
ஜவுளி பூங்கா அமைப்போம் என்று சொல்றாங்க. தமிழ்நாடு ஜவுளிகள் அதிகமாக நம்பி இருக்கின்ற ஒரு ஸ்டேட். எனவே நிச்சயம் காஞ்சிபுரம், ஆரணி, நாமக்கல்,ஈரோடு உள்ளிட்ட நிறைய இடம் ஜவுளியை நம்பி இருக்காங்க. இது வந்து வரவேற்க கூடிய ஒரு விஷயம். எல்லா இடத்திலுமே வந்து இம்போர்ட் எக்ஸ்போர்ட் நிறைய நடந்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் போல ஐடி இண்டஸ்ட்ரிஸ் இதன் மூலம் நிறைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர நிறைய ஸ்கீம்ஸ் கொண்டு வந்திருக்காங்க. இதெல்லாம் பாராட்டக்கூடியது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய நதிகள் அதாவது காவிரி, தாமிரபரணி எல்லாமே இருக்கு. இங்க நதிகள் இணைப்புக்கு, நீர் வளர்ச்சி மேலாண்மைக்கோ எந்த அறிவிப்பும் வராதது தமிழக மக்களுக்கு ஒரு ஏமாற்றம். அதே மாதிரி வரிகளுக்கெல்லாம் விலக்களித்து சிறுகுறு தொழிலாளர்களுக்கு ஒரு பயனளிக்க கூடிய அளவு வலி இல்லாத வரிகள் நீக்கம் வரும் என எல்லாரும் நம்பினார்கள். ஆனால் அது அறிவிக்கப்படவில்லை'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/01/734-2026-02-01-16-39-25.jpg)