தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வரும் 16 முதல் 18 ஆம் தேதி விலகும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், 'தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வரும் 16 முதல் 18 ஆம் தேதி விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் ஒன்றில் இருந்து தற்போது வரை 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பு அளவு என்பது 17 சென்டி மீட்டர். இந்த மாதம் தற்போது வரை மழை குறைந்துள்ளது. அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து டிசம்பர் 31ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம். அக்டோபர் 10ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

Advertisment

வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் எந்த இடத்தில் உருவாகும் என்பதை இப்பொழுது கணிக்க முடியாது. இயற்கையை நாம் இயற்கையாக தான் பார்க்க முடியும். ஓரளவுக்கு சொல்ல முடியும் 100% அக்யூரசி கிடையாது. இந்த மாதத்தில் வழக்கத்தை விட மழை அளவு குறைவாக உள்ளது. தென் மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைவாகப் பெய்யக்கூடும். சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்தகாற்று 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது' என தெரிவித்துள்ளார்.