கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக வேதி இந்திய பொறியாளர்கள் நிறுவனம், மற்றும் வேதி பொறியியல் துறை, வேதியல் துறை சார்பில் இன்று (27.12.2025) முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் தொடக்க நாளான இன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேதி பொறியியல் துறை பேராசிரியர் சரவணன் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார்.
இதனை தொடர்ந்து இந்திய வேதி பொறியாளர்கள் நிறுவனத்தின் தேசிய குழு துணைத் தலைவர் பேராசிரியர் கார்த்திகேயன் மாநாட்டில் கலந்து கொண்டு இந்திய வேதிப் பொறியாளர்கள் நாட்டின் வேதி பொறியியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை வளர்ச்சியில் ஆற்றி வரும் முக்கிய பங்களிப்பை எடுத்துரைத்தார். மாநாட்டின் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற மும்பை இந்திய வேதி பொறியியல் தொழில்நுட்ப கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜி டி யாதவ் சிறப்புரையாற்றி பேசுகையில், இந்தியாவில் வேதிப்பொறியியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் துறை நடைமுறைகளை முன்னேற்றுவதில் இந்திய வேதி பொறியாளர்கள் நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருவதை சுட்டிக்காட்டினார்.
மேலும் எதிர்காலத்தில் வேதி பொறியாளர்களுக்கு விவசாயம், உணவு பொருள் வளர்ச்சி பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரும் வாய்ப்புகள் விரிவாக இருப்பதை தெளிவாக எடுத்துக் கூறினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அறிவுடைய நம்பி, பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசினர். இதனை தொடர்ந்து மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/27/anna-malai-university-che-eng-1-2025-12-27-18-33-03.jpg)
இந்திய வேதி பொறியாளர்கள் நிறுவனம் சார்பில் பேராசிரியர் அஜய் பன்சால் மாநாட்டின் நோக்கங்களையும், செயல்திட்டங்களை பற்றி பேசினார். இம்மாநாட்டில் உலக நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் வேதி பொறியாளர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் செயலாளர் பேராசிரியர் ராஜசிம்மன் நன்றி கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/27/anna-malai-university-che-eng-2025-12-27-18-32-21.jpg)