உச்சநீதிமன்ற நீதிபதி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கடந்த 7 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விசிக வழக்கறிஞர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள விசிக தலைவர் திருமாவளவன் வந்திருந்தார். போராட்டம் முடிந்து உயர்நீதிமன்ற வளாகம் அருகே உள்ள ஆவின் பாலகம் அருகே காரில் சென்றுகொண்டிருந்த போது முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது திருமாவளவன் பயணித்த கார் மோதியதாக வாகனத்தை நிறுத்திய ஒருநபர் காரில் இருந்தவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது அங்கு இருந்த விசிக தொண்டர்கள் அந்த நபரைக் கண்மூடித்தனமாக தாக்கினர். மேலும் அந்த இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டனர். போலீசார் முன்னிலையிலேயே நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக போலீசார் வழக்கறிஞரான ரஜீவகாந்தி என்று கூறப்படும் தாக்குதலுக்கு உள்ளான நபரை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/11/a5434-2025-10-11-19-49-54.jpg)
இந்த சம்பவம் விசிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசிக தரப்பில் திருமாவளவன் தெரிவிக்கையில், “தமிழக பாஜகவின் மாநில முன்னாள் தலைவர் முந்திரிக்கொட்டை தனமாக வந்து விமர்சனம் செய்தது. எங்கள் மீது வழக்கு பதிவு செய்ய சொன்னது உள்நோக்கம் கொண்டது. இருசக்கர வாகனம் மீது எனது வண்டி மோதியதற்கு எந்த ஆதாரம் இல்லை. வீடியோ வெளியிட்டிருக்கும் தமிழக பாஜகவின் மாநில முன்னாள் தலைவருக்கும், இந்த விபத்திற்கும் தொடர்பு உண்டு. என்னுடைய காருக்கு முன்பாக ஒருவன் தான் எடுத்து இருக்க வேண்டும். தமிழக பாஜகவின் மாநில முன்னாள் தலைவர், ‘வண்டி மோதவில்லை’ என்ற பின்பு எந்த புலனாய்வு அறிக்கையைப் பெற்றார். உடனடியாக தனியார் தொலைக்காட்சி அனுப்பப்பட்டிருக்கின்ற ஐந்து நிமிடத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு எப்படி அந்த வீடியோ கிடைத்தது. உடனடியாக தமிழக பாஜகவின் மாநில முன்னாள் தலைவருக்கு மட்டும் செய்தி எப்படி தெரிகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/11/a711-2025-10-11-19-50-46.jpg)
ஒரு மணி நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குண்டர்களை கைது செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் இதை கண்டிக்கவில்லை என்று கூறியுள்ளார். விசாரித்த வகையில் பின்னாடி பிஜேபி உள்ளது. நாங்கள் விசாரித்த வகையில் திருமாவளவன் அங்கு ஆர்ப்பாட்டத்துக்கு வருகிறார். அங்கு பிரச்சனை பண்ண வேண்டும் என்று ஏற்கனவே அங்குள்ள வழக்கறிஞருக்கு தெரிவித்துள்ளார் என்பது தெரிகிறது. இது திட்டமிட்ட ஒன்று. இது குறித்து முதல்வரிடம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். இது என்னுடைய பாதுகாப்பின் விஷயமாக உள்ளது. வண்டியில் மோதியதற்கு ஆதாரம் இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் திருமாவளவன் பாஜக தான் காரணம் சொல்லியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ''திருமாவளவன் வந்த காரில் மோதியதாக சொல்லி ஒரு வழக்கறிஞரை அடித்திருக்கிறார்கள். அடித்தது திருமாவளவன் ஆட்கள். இதற்கும் ஆர்எஸ்எஸ்க்கும், பிஜேபிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அடித்தது விசிகவினர். நாங்கள் சொல்லி விசிகவினர் அடித்ததாக நினைக்கிறீர்களா? எந்த வகையில் பொருந்தும் உங்களுடைய கேள்வி. அப்பொழுது எங்கள் கூட்டணிக்கு திருமாவளவன் வந்திட வேண்டியதுதானே. தவெக உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். ஆனால் எல்லாம் ஜனவரி மாதத்திற்கு மேலேதான் தெரியும். இப்போது தமிழ்நாட்டில் ஒரு வதந்தி வந்து கொண்டிருக்கிறது. அது என்ன தெரியுமா எங்க கூட்டணிதான் வலிமையானது என்ற வதந்தி பரவிக்கொண்டு இருக்கிறது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வரும்'' என்றார்.