"Their names should be avoided" - Delhi Court instructs Photograph: (court)
டெல்லியில் கடந்த 2021 ம் ஆண்டு, 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டு ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையில் உள்ள அவர் ஜாமீன் வேண்டி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர், "குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் தாயாருக்கும், குற்றம் சட்டப்பட்டவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததது. இது அந்த சிறுமிக்கு பிடிக்காததால், இவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" எனத் தனது வாதங்களை முன் வைத்தார். ஆனால், இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த மனுவினை தள்ளுபடி செய்தார்.
மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்களில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் முகவரி குறித்த விவரங்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், டெல்லி காவல்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி, துணை காவல் ஆணையர் தனது வரம்புக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டர்களின் பெயர்கள், பெற்றோர்களின் பெயர்கள் மற்றும் முகவரி போன்றவற்றை நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளில் குறிப்பிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது குறித்து தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாள பாதுகாப்பு நலன் கருதி இத்தகைய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், பாதிப்புக்குள்ளான சிறுவர்களின் பெயர்களைத் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது.
Follow Us