The youths running towards Vijay - the bouncers who threw them for Alex Photograph: (tvk)
மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்ளது. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாடு இரவு 7 மணிவரை நடைபெற உள்ளது.
Advertisment
இதற்கிடையே மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகியது. அதன்படி தொண்டர்கள் உற்சாகமாக பல்வேறு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து “உங்கள் விஜய்.... நான் வரேன்.... ” என்ற பாடலுடன் மேடைக்கு வந்த விஜய் அவரது பெற்றோர் மற்றும் நிர்வாகிகளிடம் வாழ்த்துகளை பெற்று கொண்டு தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வாக் மேற்கொண்டார். அச்சமயத்தில் விஜயை நெருங்கி வந்த தொண்டர்களை அருகில் இருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து கொள்கைப் பாடலும், கொடி பாடலும் வெளியிடப்பட உள்ளது.
அதன் பிறகு கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையுடன் மாநாடு முறைப்படி தொடங்கியது. இந்த மாநாட்டு மேடையில் கட்சியின் விஜயின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் - சோபாவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உரையாற்றி வருகின்றனர்.