இராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னராக இருப்பவர் ஆதித்ய சேதுபதி. இவர் தமிழக பாஜக மாநில இளைஞரணி பொதுச் செயலாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு பாஜகவில் உற்றுக் கவனிக்கப்படுகிறது.
ஏற்கனவே, பாஜகவின் ஆதரவாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் இளைஞர்கள் பிரிவான ஏ.பி.வி.பி.யின் மாநில இணைச் செயலாளராகவும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜெ.என்.யூ.) அமைப்பாளராகவும் ஆதித்யா சேதுபதி பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.