Advertisment

மலையைக் குடைந்து உலகின் மிக நீண்ட சுரங்கப்பாதை; அசத்திய சீனா!

china-moundain-bridge

உலகில் அதிவேக பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று. சீனா சாதாரண பொருட்கள் முதல் அறிவியல் தொழில்நுட்பம் வரை அனைத்துத் துறைகளிலும்  முன்னணியில் இருக்கும் நாடாகும். அந்த வகையில் உலகிற்கு பல்வேறு தொழில்நுட்பங்களை வழங்கி வரும் சீன தற்போது மிகப் பிரமாண்டமான  சுரங்கப் பாதையொன்றை அமைத்துள்ளது.  

Advertisment

உலகின் மிக நீண்ட சுரங்கப்பாதையான இதன் நீளம் சுமார் 22.13 கிலோ மீட்டர் எனக் கூறப்படுகிறது. சீனாவில் உள்ள தியான்ஷாங் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதையை தற்போது திறந்து வைத்துள்ளது அந்நாட்டு அரசு. சுரங்கப்பாதையின் சுவர் நெடுகிலும் வண்ண வண்ண ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. சின்சியாங்  உன்குர்  பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ளது இந்த சுரங்கப்பாதை. பணிகள் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையால் பயண நேரம் வெகுவாகக் குறையும் எனக் கூறப்படுகிறது. 

Advertisment

சின்சியாங் பிராந்தியத்திலுள்ள வடக்கு மற்றும் தெற்கில் உள்ள பல நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை மக்களின் பயண நேரத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வேலைகளையும் எளிதாக்கும் எனவும் கூறப்படுகிறது. மிகப் பிரமாண்டமான உலகின் மிக நீண்ட சுரங்கப்பாதை தற்போது சீனாவில் திறக்கப்பட்டிருப்பது, சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாகும்.

Bridge china mountain
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe