இந்தியாவின் நம்பர் 1 பட்டாசு பிராண்டான வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள உலகின் முதல் விதைப்பட்டாசான சீட்ஸ்டார் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த தீபாவளியில் சூழலுக்கு மாசு விளைவிக்காத விதைகளாக மாறும் பட்டாசுகள் வெடித்து, பசுமையான எதிர்காலத்தை சந்ததிகளுக்கு விட்டு செல்வோம்.
84 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற பிராண்டான வடிவேல் பைரோடெக்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் முன்னணி பட்டாசு உற்பத்தியாளர்களில் ஒன்று. 1937 ஆம் ஆண்டு பிரீமியர் பட்டாசுகளாக நிறுவப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய தரமான மற்றும் புதுமையான பட்டாசு உற்பத்தியாளராக வளர்ந்துள்ளது. பாரம்பரியத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொடர்ந்து இணைத்து, கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியாகவும் பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்கிறது.
சுதந்திரத்திற்கு முன்பிருந்து அதாவது, 1945 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 84 ஆண்டுகளாக இயங்கி வரும் வடிவேல் பைரோடெக்ஸ், உலகின் புரட்சிகரமான கண்டுபிடிப்பான 'பசுமை பட்டாசு' வகையை சேர்ந்த சீட்ஸ்டார் அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பட்டாசு வெடித்து கொண்டாடுவது மட்டுமல்லாது, கொண்டாட்டங்களுக்குப் பிறகு அவை தாவர விதைகளாகவும் மாறுகிறது. இதன் மூலம், சுற்றுச்சூழலை கொண்டாட்டங்கள் பாதிக்காத வகையில் சமூக பொறுப்புடனும் அமையும்.
சீட்ஸ்டார் பட்டாசுகள் வெடிக்கும் இரசாயனங்களை வெப்ப-எதிர்ப்பு விதை தொகுப்புகள் மற்றும் மண்புழு உரம் பதப்படுத்தப்பட்ட கிராஃப்ட் பேப்பருடன் இணைக்கின்றன. பற்றவைத்தவுடன், விதைகள் காற்றில் பாதுகாப்பாக செலுத்தப்படும் அல்லது வரையறுக்கப்பட்ட சுற்றளவில் சிதறடிக்கப்படும். மக்கும் ஓடுகள் மற்றும் குழாய்கள் தயாரிக்கப்பட்ட கிராஃப்ட் பேப்பருடன் இணைந்து மாசுபாட்டை குறைத்து விதைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்தை வழங்குகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு தீபாவளிக்கும் வெடிக்கப்படும் மில்லியன் கிலோகிராம் பட்டாசுகள் காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது. இந்த பிரச்சினைக்கான தீர்வாக சீட்ஸ்டார் அறிமுகமாகியுள்ளது. வழக்கமான பசுமை பட்டாசுகள் உமிழ்வை 30-35% குறைக்கும். இந்த அளவை சீட்ஸ்டார் மேலும் குறைக்கிறது. இதுமட்டுமல்லாது, உயர்தர உள்நாட்டு விதைகளை நடுவதன் மூலம் சுற்றுச்சூழலின் பசுமையையும் பாதுகாக்கிறது.
சீட்ஸ்டார் வளர்ச்சியை வடிவேல் பைரோடெக்ஸின் நிர்வாக இயக்குனர் வசந்த் விகாஸ் ஆறுமுகசாமி, இணை நிர்வாக இயக்குனர் அதிபன் ஆறுமுகசாமி மற்றும் கிரியேட்டிவ் பிராண்டிங் பார்ட்னர் பர்த் மார்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.எஸ். சைலேந்திரா ஆகியோர் வழிநடத்தினர். புங்கன் மர எண்ணெய், வேம்பு, புளி, மூங்கில், பப்பாளி, எலுமிச்சை, சவுக்கு, தேக்கு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய முப்பது உள்நாட்டு விதை வகைகள் சீட்ஸ்டாருக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. உகந்த சூழ்நிலையில், இந்த விதைகளில் குறைந்தது 50% வெற்றிகரமாக முளைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அதிபன் ஆறுமுகசாமி பகிர்ந்து கொண்டதாவது, "எங்கள் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த வேளையில் புதுமை மற்றும் நிலைத்தன்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக சீட்ஸ்டார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகையையும் பொறுப்பையும் இணைக்கும் வகையில் சீட்ஸ்டார் உருவாகியுள்ளது. தொழில்துறையிலும் புதிய சகாப்தத்தை இது தொடங்கி வைத்துள்ளது" என்றார்.
வசந்த் விகாஸ் ஆறுமுகசாமி பகிர்ந்து கொண்டதாவது, "பட்டாசுகளால் ஏற்படும் தொடர்ச்சியான மாசுபாட்டிற்கு ஒரு நிரந்தர தீர்வாக சீட்ஸ்டார் அமையும். சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாமல் மக்கள் தங்கள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட சிறந்த மாற்றாக சீட்ஸ்டாரை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்றார்.
பர்த் மார்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.எஸ். சைலேந்திரா பகிர்ந்து கொண்டதாவது, "புதுமையான கண்டுபிடிப்புகளே சிறந்த எதிர்காலத்திற்கான திறவுகோல். புதுமையான சிந்தனையுடன் பாரம்பரியத்தையும் இணைத்து பசுமையான இந்தியாவை உருவாக்கும் விதமாக சீட்ஸ்டார் அறிமுகமாகியுள்ளது" என்றார்.