புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான மெய்நின்றநாதர் - ஒப்பிலாமணி அம்பிகை ஆலயம் (சிவன் கோயில்) உள்ளது. இந்த கோயிலுக்கு தலைமைப் புலவர் நக்கீரர் வந்து மெய்யின் பக்கம் நிற்கும் சிவனிடம் நீதி கேட்தாக செவிவழிச் செய்திகள் உண்டு. சுமார் 800 ஆண்டுகளுக்கு இந்த ஆலயம் குடமுழுக்கு செய்யப்பட்ட பிறகு கடந்த 2016ம் ஆண்டு மீண்டும் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
800 ஆண்டுகளுக்கு கோயில் முன்பு உள்ள பெரிய குளத்தை கீரமங்கலம் பகுதி வணிகர்கள் பராமரித்துள்ளனர் என்று கல்வெட்டு பதிவுகள் உள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் நடுவில் 82 அடி உயர பிரமாண்ட சிவன் சிலை, சுற்றுச்சுவர், தடுப்புச்சுவர், நடைபாதை அமைத்து 2015 ம் ஆண்டு திறக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் நடை பாதை வழியாக சிவன் சிலையை சுற்றிப் பார்ப்பதுடன் மாலை நேரங்களில் நடை பாதை ஓரங்களில் அமர்ந்து செல்வது வழக்கம். அதே போல ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சிக்காகவும் வந்து செல்கின்றனர். பக்தர்கள் கிரிவலம் செல்வதும் வழக்கம். சிவராத்திரி நாளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/21/sivan2-2025-10-21-12-52-37.jpg)
இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் நடைபாதையில் தண்ணீர் இறங்கி தடாகத்தின் சுற்றுச்சுவர் வழியாக தண்ணீர் சென்றதால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வடக்கு பக்கம் உள்ள முழு சுவரும் சாய்ந்து நிற்கிறது. தொடர்ந்து மழை பெய்தால் சுவர் முற்றிலும் சாயும் நிலையில் உள்ளது. நடைபாதை மற்றும் தடாகத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் அச்சத்துடனேயே சிவன் சிலையை சுற்றி வருகின்றனர். மேலும் தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் குளத்தின் தடுப்புவர் மேலும் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளதால் ஏராளமான பக்தர்கள் வந்து செல்ல அச்சப்படுகின்றனர். விரைந்து சீரமைக்க வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.