சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருபுறம் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் சூழலில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினரும் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்தில் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Advertisment

1.கிராம நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழும் கிராம நிர்வாக அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலகமாக அமைத்து தரக்கோருதல். 

Advertisment

2).கிராம நிர்வாக அலுவலர்களின் TNPSC நேரடி நியமன முறையில், கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க கோருதல்.

3).கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ள நிலையில் பத்தாண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும், இருபதாண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, சிறப்புநிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட கோருதல்.

Advertisment

4).கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி உயர்வில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்களின் விகிதாச்சாரங்களுக்கேற்ப, 30 சதவீதம் என்பதிலிருந்து 50 சதவீதமாக மாற்றம் செய்து, கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி உயர்வுக்கான கால வரம்பை ஆறு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்து அரசாணை வெளியிட கோருதல். 

5). தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும், சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியமும் வழங்க கோருதல்.

6). TSLR பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரை பெற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், இதுநாள் வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த கோருதல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.