வெனிசுலா நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் நிகோலஸ் மதுரோ. இத்தகைய சூழலில் தான் வெசுலாவின் தலைநகரான கராகஸ் நகரின் பல பகுதிகளில் இன்று அதிகாலையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குண்டு வெடிப்பால் அந்த பகுதிகளில் தீப்பிழம்புகள் ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்தது. மேலும் தலைநகரின் பல இடங்களில் விமானங்கள் தாழ்வாக பறந்தன. இதனால், வெனிசுலாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. வெனிசுலா நாட்டின் துணை அதிபர் டெல்சி தங்கள் நாட்டின் அதிபரைக் காணவில்லை என்று கூறியிருந்த நிலையில், அவர்களைத் தாங்கள் தான் கடத்தியுள்ளதாக அமெரிக்கா தகவல் அளித்துள்ளது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் வெனிசுலா படைகள் மீதுதாக்குதல் நடத்தி வருகிறது. வெனிசுலாவைச் சுற்றி கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது. வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வெனிசுலாவில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், இத்தகைய சூழலில் நடந்துள்ள இந்த தாக்குதலை அமெரிக்கா தான் இதனை நிகழ்த்தியிருக்கும் என்று கருதப்பட்டது. இதை அமெரிக்க அதிபர் டிரம்பும் உறுதி செய்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/03/donald-treump-2026-01-03-18-09-17.jpg)
இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், “அமெரிக்காவின் இந்த செயல், வெனிசுலாவின் தேசிய இறையாண்மை மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்” என்று ஈரான் கண்டித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பேச ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கொலம்பிய அதிபர். அமெரிக்கா செய்தது குற்றச் செயல்" என்று கியூபா சாடியுள்ளது. இதனால் உலக அளவில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலர் கிறிஸ்டோபர் லண்டவு கூறுகையில், ‘வெனிசுலா அதிபர் தனது குற்றங்களுக்காக நீதியை எதிர்கொள்ளப் போகிறார்’ என்று தெரிவித்துள்ளார். இதனால், அமெரிக்கா அவர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது குறித்து பரபரப்பு கிளம்பியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/03/venizula-president-2026-01-03-18-08-49.jpg)