தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றத்தின் பெயர் ‘சென்னை உயர் நீதிமன்றம்’ என்பதை மாற்றி ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் அதிமுக ஆட்சியில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி மத்திய அரிசிற்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், மிக நீண்டகாலமாக இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்படாமல், மத்திய அரசிடம் நிலுவையிலிருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த தீர்மானம் எந்த நிலையில் உள்ளது என, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்த தீர்மானம் பரிசீலனையில் இருப்பதாகப் பதிலளித்தார். இந்த தீர்மானம் குறித்த கோரிக்கையை விரைந்து பரிசீலனை செய்ய வேண்டுமென தம்பிதுரை கேட்டுக்கொண்டார்.
மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஒரே உயர் நீதிமன்றம் தான் உள்ளது. அம்மாநிலங்களுக்கு தனித்தனி உயர்நீதிமன்றங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், உத்திர பிரதேச மாநிலத்தில் அலகாபாத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்ற அமர்வின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/05/chema-2026-02-05-20-09-42.jpg)