Advertisment

“த.வெ.க. அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல” - தேர்தல் ஆணையம் தகவல்!

eci-tvk

மதுரை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கரூரில் தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகி உள்ளனர். அரசியல் கட்சியின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகளை என கூட்டம் கூட்டுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்த விதிகளுக்கு முன்னானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தடை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தேர்தல் ஆணயத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது. 

Advertisment

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்கில் உத்தரவிட்டுள்ளது. விஜய்மற்றும் த.வெ.க.வினர் அஜாக்கிரதையாலும் , முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினாலும் தான் கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய்யின் பெயரை சேர்க்காமல, குற்றம் சாட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து எளிதில் தப்பிக்கும் வகையில் சாதாரண பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு முடியும் வரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்களுக்கோ, ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கோ அனுமதிக்க கூடாது டி.ஐ. ஜி உத்தரவிட வேண்டும். 

Advertisment

அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பெண்கள், குழந்தைகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த விதிகளை மீறியதற்காக த.வெ.க.வின் அரசியல் கட்சியின் அங்கிகரிக்கப்பட்ட அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட வழக்கில் விஜய்யையும் சேர்க்க வேண்டும். சிறார் நீதி சட்டம், குழந்தைகள் தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விஜய்யின் பெயரையும் சேர்க்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்குதான் தலைமை நீதிபதி எம்.ஸ்ரீ வட்ச்சவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (17.10.2025) இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இரஞ்சன், “தமிழக வெற்றிக் கழகம் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல. அதனால் அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப முடியாது” என்று தெரிவித்தார். 

இதையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும் டிஜிபிக்கும், நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், “மனுவில் எழுப்பப்பட்ட சில கோரிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குடன் தொடர்புள்ளது. சில கோரிக்கைகள் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக உள்ளதாலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட உள்ள சிறப்பு அமர்வு முன்பு இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நிகழ்ச்சிகள் நடத்த வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக்கூடிய அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வு விசாரிக்கும்” என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

election commission of india high court POLITICAL PARTY Tamilaga Vettri Kazhagam tvk vijay karur stampede
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe