முருகன் சிலை ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரோலுக்கு உள்ளான நிலையில் மாற்றி புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு தயாராகி வருகிறது.

Advertisment

அண்மையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ராஜ முருகன் கோவிலில் 56 அடி உயரமுள்ள முருகன் சிலை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டிருந்தது. அழகென்ற சொல்லுக்கு முருகு என்ற அர்த்தம் உள்ள நிலையில் முருகன் சிலையின் முகம், உடல் என அனைத்தும் வித்தியாசமாக இருந்ததால் சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளானது. அந்த சிலையை வடிவமைத்த சிற்பி முனீஸ்வரன் உள்ளிட்ட ஆக்ரோஷ முகபாவம் கொண்ட சிலைகளை வடிவமைத்து பழகியவர் என்ற நிலையில் முதல் முறையாக முருகன் சிலையை செய்ததால் இப்படி வந்துவிட்டதாகக் கோவில் நிர்வாகத்திடம் கூறியிருந்தார்.

Advertisment

சமுக வலைத்தளங்களில் பெரும் ட்ரோலுக்கு இந்த முருகன் சிலை உள்ளானது. அதே சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி புத்திரகவுண்டன்பாளையம் பகுதியில் உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தாரமங்கலம் ராஜ முருகன் கோவில் சிலை மறைக்கப்பட்டு மீண்டும் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அக்கோவில் குடமுழுக்கு விழாவிற்கு தயாராகி, ராஜ அலங்கார கோலத்தில் மறுவடிவம் கொடுக்கப்பட்ட முருகன் சிலை திறக்கப்பட்டுள்ளது.