Advertisment

மணமேடையில் மணமகளுக்கு நேர்ந்த துயரம்!

bh-ins

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் திருமண விழா ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த விழாவில் மணமக்களுக்குத் திருமண சடங்குகள் நடைபெற்றது. இந்த சடங்கின் போது மணமகளின் தங்கை மணமகனின் நெற்றியில் குங்குமப் பூவை பூசிக்கொண்டிருந்தார். அதன் பிறகு, மணமகளுக்குச் சடங்கு செய்ய அவர் திரும்பிய தருணத்தில், மணமேடையின் அருகே இருந்த ஒரு நபர் மணமகளைத் துப்பாக்கியால் சுட்டார். வயிற்றில் குண்டு துளைத்ததால் மணமகள் கீழே சரிந்து விழுந்தார். 

Advertisment

இந்த சம்பவத்தைக் கண்டு அங்கு இருந்தவர்கள் அதிர்ந்து போயினர். இதற்கிடையே மணமகளைச் சுட்ட அந்த நபர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, மணமகளை பக்சரில் உள்ள சதார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு போதிய சிகிச்சை வசதிகள் இல்லாத காரணத்தினால், உயர்தர சிகிச்சைக்காக மணமகளை வாரணாசிக்குக் கொண்டு சென்றனர். இதனிடையே, மணமகள் ஆர்த்தி குமாரியின் (வயது 18) அண்டை வீட்டாரான தீனபந்து என்பர் தான் இந்த குற்றச் செயலை செய்துள்ளார் எனத் தெரியவந்தது.

Advertisment

முன்னதாக, தீனபந்து குமாரியை ஒருதலையாகக் காதலித்து வந்த நிலையில், இந்த காதலைக் குமாரி ஏற்க மறுத்துவிட்டார். இதன் காரணமாக, அந்த நபர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்" என மணமகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகளின் உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சந்தேக நபரைத்  தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

incident Wedding Bihar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe