காட்டுமன்னார்கோவில் அருகே 3 அடிக்கு மேல் உள்ள வெள்ளநீரில் இறந்தவரின் உடலை தூக்கி சென்ற பொதுமக்கள். வெள்ள நீர் செல்லும் வாய்க்கால் கரையை பலப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி குமார் (54). இவருக்கு திருமணமாகி மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று (07-12-25) வயலுக்கு சென்ற குமார், மயக்கம் அடைந்து வயல் வெளியில் விழுந்து கிடந்துள்ளார். அக்கிராம பொதுமக்கள், அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதனை தொடர்ந்து, அவரது உடல் அடக்கம் இன்று நடைபெற்றது. அப்போது அவர்கள் வசிக்கும் கம்பன் தெருவில் இடுகாட்டுக்கு செல்லும் பாதை 3 அடிக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்து இருந்தது. இதில் தான் அவரது இறுதி ஊர்வலம் நடந்தது. இதனை பார்த்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இது அனைவர் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மக்கள், மழைக்காலங்களில் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ள நீர் நந்திமங்கலம் கிராமத்தையொட்டி உள்ள வாய்க்காலில் வழியாக செல்லும். அப்போது வாய்க்காலின் கரைகள் பலப்படுத்தாமல் உள்ளதால் வெள்ள நீர் கம்பன் தெருவில் அதிக அளவு சூழ்ந்து விடும். இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியல் சமூக மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் பல்லாண்டு காலமாக வாய்க்கால் கரையை பலப்படுத்த வேண்டும், சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அமைத்து வேண்டும் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இறந்து போன குமாரும் இதற்காக அதிகாரிகளிடம் மனு அளித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். தற்போது இவர் இறந்த பிறகும் இதே தண்ணீரில் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் வாய்கால் கரையை பலபடுத்துவோ, சுடுகாட்டுக்கு புதிய பாதை அமைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர்.

Advertisment