Advertisment

கலப்பட பாலால் நேர்ந்த சோகம்

921

milk Photograph: (inspection)

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே உள்ள நரசபுரம் கிராமத்தில் வரலட்சுமி பால் பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. இது அரசு அங்கீகாரம் பெறப்படாத பால் பண்ணையாகும். அட்டல கணேஸ்வர ராவ் என்பவர் இந்த பால் பண்ணையை நடத்தி வருகிறார். இந்த பண்ணையிலிருந்து லாலா செருவு மற்றும் சௌடேஸ்வரி நகர் பகுதி மக்களுக்குத் தினமும் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கணேஷ் விநியோகித்த பாலை குடித்த மக்கள் உடல் நலப் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, அவர்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

Advertisment

இதையடுத்து, 48 மணி நேரத்திற்குள் நான்கு நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், 12 பேர் மருத்துவமனையில் உள்ளதாகவும், அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கணேஸ்வர ராவைக் கைது செய்தனர்.

Advertisment

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் 46 விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து 106 குடும்பத்தினருக்கு விநியோகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாவட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட  73 குடும்பங்களில் இருந்து பாலின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியது. அதே நேரத்தில், 46 விவசாயிகளிடமும் மாட்டிற்கு வழங்கப்பட்ட உணவுகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குத் தல ரூ.10 லட்சம் வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக,  பாலில் யூரியா, டிடர்ஜென்ட் மற்றும் ஃபார்மலின் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.  இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Food saftey milk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe