The test engine that came as a surprise - 20 lives lost Photograph: (theni)
ஆடுகளை மேய்க்கச் சென்ற மூதாட்டி ஒருவர் ரயில் மோதி உயிரிழந்த நிலையில் இந்த விபத்தில் 19 ஆடுகளும் உயிரிழந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி மாவட்டம் அரண்மனை புதூர் விளக்கு மேம்பாலம் அருகே பத்ரகாளி என்ற மூதாட்டி ஒருவர் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த பகுதியில் உள்ள ரயில் தண்டவாள பகுதி அருகே அவர் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த சோதனை ரயில் என்ஜின் மோதி மூதாட்டி பத்ரகாளி சம்பவ இடத்திலேயே தலை துண்டாகி உயிரிழந்தார். மேலும் அவர் மேய்த்து வந்த ஆடுகளில் 19 ஆடுகள் உயிரிழந்தன.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மூதாட்டியும் அவர் மேய்த்து வந்த ஆடுகளும் என மொத்தமாக 20 உயிர்கள் ரயில் விபத்தில் பறிபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us