மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் ஆப் மூலம் கணக்கு எடுக்கும் பணியை தவிர்க்க வேண்டும் என விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கிஷன்குமாரை கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் கண்ணன் தலைமையில் உழவர் மன்ற கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன், சேத்தியாதோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்க தலைவர் சரவணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அஸ்லாம், உழவர் மன்ற கூட்டமைப்பின் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கற்பனைச்செல்வம், கான்சாகிப் பாசன விவசாயிகள் சங்க பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.
அந்த மனுவில் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை கடுமழையால் சம்பா நெல் வயல்கள் பாதிக்கப்பட்டது. இதனை வேளாண்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைதொடர்ந்து சேதம் அடைந்த பகுதிகளில் உள்ள அழுகிய நாற்றுகளை பிடுங்கிவிட்டு மீண்டும் நாற்று வாங்கி நடவு செய்துள்ளனர்.
ஆகையால் சேதமாகி மீண்டும் நடவு செய்த நிலங்களையும் கணக்கெடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் வேளாண் ஆப் மூலம் கணக்கெடுக்கும் பணியை தவிர்த்து எப்போதும் போல் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த பல கிராம விவசாயிகளுக்கு இன்னும் காப்பீட்டு தொகை வழங்கவில்லை அதனையும் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ஆம் தேதி தில்லைவிடங்கன் மேல சாவடியில் அனைத்து பகுதியில் உள்ள விவசாயிகளையும் ஒருங்கிணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/kali-2025-12-12-18-23-06.jpg)