அரசு முறை பயணமாக ஒரு வாரம் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆயத்தமாகி வருகிறார்.

Advertisment

இந்நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற 'மாபெரும் தமிழ்க் கனவு' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் வெளிநாட்டு வாழ் தமிழர் மக்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ''கண்டங்கள் விட்டு கடந்து விட்டாலும் நம் தொப்புள் கொடி உறவு அறுந்துவிடவில்லை. உலகில் எந்த இடத்திற்கு போனாலும் அங்கு தமிழன் இருப்பான்.

உரிமையோடு நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள். நம் தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக அமெரிக்க, சிங்கப்பூர் உள்ள நாடுகளுக்கெல்லாம் பயணத்தை மேற்கொண்டு ஏராளமான தொழில் முதலீடுகளை ஈர்த்து நம்ம மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நீங்கள் பணிபுரியும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். வளர்வதும் வாழ்வதும் தமிழினமும் தமிழ் மொழியாகவும் இருக்க வேண்டும்'' என்றார்.