பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (14-10-25) காலை 9:30 மணிக்கு தொடங்கவுள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட உள்ளது.

Advertisment

அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளபடி இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் 17ஆம் தேதி வரை என 4 நாட்கள் நடைபெறவுள்ளது. அதன்படி முதல் நாளான இன்று, கரூரில் நடைபெற்ற துயர சம்பவம், மறைந்த முன்னாள் கேரள முதல்வர் பி.எஸ். அச்சுதானந்தன், நாகலாந்து மாநில ஆளுநர் இல கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் பீலா வெங்கடேசன் உட்பட அனைவருக்கும் சட்டமன்றத்திலே இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து, டிகே அமுல் கந்தசாமி சட்டமன்ற உறுப்பினருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை நிகழ்ச்சிகள் இன்றைய தினம் ஒத்திவைக்கப்படும்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக நாளை (15-10-25) 2025-26க்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கை அளிக்கப்படும். அதனை தொடர்ந்து விவாதம் நடைபெற்று அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.