வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். 

Advertisment

அப்போது அவர் பேசுகையில், “இன்றைக்குக் காலையில், இலங்கையில் உள்ள கொழும்பு விமானநிலையம் அமைந்துள்ள இடத்தில் வானிலை கொஞ்சம் கிளியர் ஆகியுள்ளது.  இதனால் விமானம் அங்கிருந்து கிளம்பியது. இருப்பினும் இங்கே கிளைமேட் சரியில்லை என்பதால் மீண்டும் அங்கேயே திருப்பி விடப்பட்டது. அநேகமாக, இலங்கையில் உள்ளவர்கள் இன்றைக்குத் தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கும் என்று  எதிர்பார்த்தோம். இங்கே வானிலை சரியாக இல்லாத காரணத்தால் தான் விமானங்கள் புறப்பட முடியாமல் அங்கேயும், இங்கேயும்  உள்ளது. பயணிகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். 

Advertisment

கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே போன்று  தஞ்சாவூரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மயிலாடுதுறையில் 20 வயது இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கால்நடை மொத்தம் 149 உயிரிழந்துள்ளன. குடிசைகள், வீடுகள் என 234 சேதமடைந்துள்ளன. எஸ்.டி.ஆர்.எப். மற்றும் என்.டி.ஆர்.எப். என 28 குழுக்கள் இருந்த நிலையில் தற்போது மேலும் 10 குழுக்கள் தனி விமானத்தில்  வந்துள்ளனர். அவர்களும் சேர்த்து 38 குழுக்கள் தயாராக  உள்ளனர். எனவே . எந்த பகுதிக்கு அவசியம் என்று தெரிகிறதோ அந்த பகுதிக்கு அனுப்புவதற்கும் தயாராக இருக்கிறோம்.

30-11.2025-ditwah-cyclone

சென்னையில் பெரியளவுக்கு மழை இல்லை. நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை  மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் மழை பெய்கிறது. அந்த பகுதிக்கு மாவட்ட நிர்வாகம் சென்று எங்கே தண்ணீர் தேங்கி இருக்கிறது எந்த பகுதியில் அரசினுடைய உதவி தேவை என்பதை எல்லாம் மாவட்ட நிர்வாகம் அதற்கான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகுந்த அறிவுரை வழங்கி இருக்கிறார். மாவட்ட நிர்வாகம் எங்களிடம் என்ன உதவி கேட்கிறார்களோ, அந்த உதவியை நாங்கள் ய முதலமைச்சருடைய கவனத்திற்குக் கொண்டு சென்று அந்த பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். 

Advertisment

பொதுவாகக் கட்டுப்பாட்டு மையமும், கடலோர மாவட்டத்தில் உள்ள மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து தொடர்பில் இருக்கும். அதேபோல வானிலை ஆய்வு மையத்தோடும் நாங்கள் தொடர்ந்து தொடர்பிலே இருந்து கொண்டிருக்கிறோம். ஆகவே நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 56 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில்  24 ஆயிரம், திருவாரூரில் 15 ஆயிரம் மயிலாடுதுறையில் 8 ஆயிரம் என மொத்தம் 56 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சொல்லி இருக்கிறார்கள். அதனைத் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுத்து அதற்குரிய இழப்பீடு வழங்குவது பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவெடுப்பார்” எனத் தெரிவித்தார்.