The Second State Convention of the Tvk-Pandhal Kal Vishva was held with Yaga Pooja Photograph: (tvk)
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான பந்தல் கால் நடும் நிகழ்வு தற்போது யாக பூஜையுடன் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டுள்ளார். மொத்தமாக 300 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தல் போடப்படுகிறது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற்றது. இந்நிலையில் கட்சியினுடைய இரண்டாவது மாநில மாநாடு தென் மாவட்டங்களின் முக்கிய மாவட்டமாக கருதப்படும் மதுரையில் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பாரப்பட்டி என்னுமிடத்தில் மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலையில் இன்று காலை சரியாக 5:00 மணிக்கு கட்சியினுடைய பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் மதுரையைச் சேர்ந்த இரண்டு மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்க, பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா நடைபெற்று முடிந்தது.