Advertisment

நிறைவடைந்த இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம்!

biharcamp

The second phase of the bihar election campaign has concluded

பீகார் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில், 121 தொகுதிகளில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணி, பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் என மொத்தம் 1,314 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Advertisment

இதில் ஆர்ஜேடி கட்சியின் தலைவரும் மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், பாஜக தலைவர்கள் மற்றும் அம்மாநில துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ​​ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் முதற்கட்ட வாக்குப்பதிவில் உள்ளடக்கியுள்ளன. மேலும் பல உயர் தலைவர்கள் இந்த கட்ட  வாக்குப்பதிவிற்கான களத்தில் இருந்தனர்.

Advertisment

இதனையொட்டி வாக்காளர்கள், அன்று காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடிகளில் வரிசையாக நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். முதற்கட்ட வாக்குப்பதிவில் 3.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு பிறகு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஏராளமான வாக்காளர்கள் காலை முதல் வாக்களித்த நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று (09-11-25) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது.

Bihar bihar assembly election election campaign
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe